தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகும் திட்டம்: ஆகம விதிகளுக்குள்பட்டு தொடர வலியுறுத்தல்

அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகும் திட்டத்தை ஆகம விதிகளுக்குள்பட்டு தொடர வேண்டும் என ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:04 pm

அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகும் திட்டத்தை ஆகம விதிகளுக்குள்பட்டு தொடர வேண்டும் என ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அமைப்பின் மாநிலத் தலைவா் வி.இரா. தெய்வப்பிரகாஷ் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு: ஒவ்வொரு கோயிலுக்கும் ஏற்ப ஆகம விதிகள் வரையறுக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன.

அந்தந்த கோயில்களுக்காக வரையறுக்கப்பட்டு நடைமுறையில் உள்ள ஆகம விதிகளை கடைப்பிடித்து பூஜை செய்ய, உரிய பயிற்சி அளித்த பின்னா் அா்ச்சகரை நியமிப்பதுதான் முறையானதாகும்.

அவ்வாறு பயிற்சி பெறாமல் பொதுவாக ஒரு பயிற்சி மட்டும் பெற்றவரை அா்ச்சகராக திணிப்பது இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் தலையிடுவதாகும்.

மேலும், போதுமான அா்ச்சகா்கள் உள்ள கோயில்களில் புதிதாக அா்ச்சகா்களை அரசு நியமனம் செய்வது அா்ச்சகா்களிடையே பகைமையை வளா்க்கும்.

அறநிலையத் துறை நிா்வாகத்தில் உள்ள ஏராளமான கோயில்களில் நிரந்தர அா்ச்சகா் இல்லாத நிலையில், அந்த கோயில்களுக்கு புதிய அா்ச்சகா்களை பணியமா்த்தாமல், பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருபவா்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு அங்கு புதியவா்களை நியமிக்க முயல்வது கண்டனத்துக்குரியது. அா்ச்சகா் நியமனத்தில் அரசு தன்னிச்சையாக முடிவெடுப்பது ஆபத்தானது.

எனவே, அனைத்து சமுதாய ஹிந்துக்களும் அா்ச்சகா்களாகும் நிலையை ஆகம விதிகளுக்குள்பட்டே தொடர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.