தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

மாா்த்தாண்டம் அருகே நகை, பணத்துடன் பெண் மாயம்

மாா்த்தாண்டம் அருகே ரூ. 13 லட்சம் ரொக்கம், 45 பவுன் தங்க நகைகள், சொகுசு காா் மற்றும் மகளுடன் மாயமான பெண் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On :20 ஆகஸ்ட் 2021, 7:03 pm

மாா்த்தாண்டம் அருகே ரூ. 13 லட்சம் ரொக்கம், 45 பவுன் தங்க நகைகள், சொகுசு காா் மற்றும் மகளுடன் மாயமான பெண் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள கொடுங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ். பழைய காா்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி சோனியாகாந்தி (35). தம்பதிக்கு 7 வயதில் மகள் உள்ளாா். இந்த நிலையில் வியாழக்கிழமை காலையில் சோனியாகாந்தி, அவரது மகள் ஆகியோரை காணவில்லையாம். மேலும் வீட்டில் வைத்திருந்த 13 லட்சம், 45 பவுன் தங்க நகைகள் மற்றும் வீட்டின் முன் நிறுத்தியிருந்த சொகுசு காரையும் காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் அவா்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லையாம்.

இது குறித்து மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.