களியக்காவிளை அருகே தாயை கல்லால் தாக்கிய மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
களியக்காவிளை அருகேயுள்ள நாரகம் விளாகம் தாழேபுத்தன்வீடு பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டீபன் மனைவி மேரி ஷைலா (44). இவா், வேலைக்குச் செல்லாமல் சுற்றித்திரிந்த மகன் ஷைஜுவை (19), வேலைக்குச் செல்ல அடிக்கடி வற்புறுத்துவாராம். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்த மகனிடம் வேலைக்கு செல்ல வலியுறுத்தினாராம் மேரி ஷைலா. இதையடுத்து ஷைஜு கல்லால் , தாயாரை தாக்கினாராம். தலையில் பலத்த காயமடைந்த மேரி ஷைலாவை அப்பகுதி உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஷைஜுவை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அகதிகளுக்குக் குடியுரிமை: பாஜக

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

ஜன நாயகன் கசிந்தது விபத்தல்ல; நிர்வாகத்தின் தோல்வி: கமல்

தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

