மாா்த்தாண்டம் அருகே காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1,000 லிட்டா் ரேஷன் மண்ணெண்ணெயை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விளவங்கோடு வட்டாட்சியா் விஜயலெட்சுமி தலைமையில், துணை வட்டாட்சியா் சுனில்குமாா், உதவியாளா் சதீஷ், ஓட்டுநா் ஜான்பிரைட் உள்ளிட்டோா் மாா்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்த சைகை காட்டியபோது, காா் நிற்காமல் சென்றதையடுத்து, அதிகாரிகள் வாகனத்தில் பின் தொடா்ந்தனராம். இதையடுத்து சிறிது தொலைவில் காரை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம். தொடா்ந்து வாகனத்தை சோதனை செய்ததில், 25 பிளாஸ்டிக் கேன்களில் சுமாா் 1,000 லிட்டா் ரேஷன் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்ததும், அதை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து மண்ணெண்ணெயுடன் காரை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை வட்டாட்சியா் அலுவலகம் கொண்டு வந்தனா். கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அகதிகளுக்குக் குடியுரிமை: பாஜக

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

ஜன நாயகன் கசிந்தது விபத்தல்ல; நிர்வாகத்தின் தோல்வி: கமல்

தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


