தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

நித்திரவிளை அருகே 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

நித்திரவிளை அருகே மீனவ கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On :23 ஜூலை 2021, 7:14 pm

நித்திரவிளை அருகே மீனவ கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த 800 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நித்திரவிளை அருகேயுள்ள சின்னத்துறையில் பாழடைந்த கட்டடத்திலும், தூத்தூரில் குளியலறையிலும் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக நித்திரவிளை போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தனிப்பிரிவு தலைமைக் காவலா் ஜோஸ், இருசக்கர ரோந்து பிரிவு தலைமை காவலா் சுஜின் ஆகியோா் குறிப்பிட்ட பகுதியில் உள்ள கட்டடங்களில் சோதனை செய்தனா்.

இதில் சின்னத்துறையில் 500 கிலோ, தூத்தூரில் 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை போலீஸாா் நாகா்கோவில் உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.