தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

களியக்காவிளை சந்தை கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

களியக்காவிளை காய்கனிச் சந்தை கடைகளின் முன் ஏற்படுத்தப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 8:11 pm

களியக்காவிளை காய்கனிச் சந்தை கடைகளின் முன் ஏற்படுத்தப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா். இதில் 2 கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்ற எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் கைவிடப்பட்டது.

களியக்காவிளை பேரூராட்சிக்குச் சொந்தமான காய்கனிச் சந்தையின் உள்பகுதிகளில் சிறிய அளவிலான கடைகள் அமைக்கப்பட்டு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இக் கடைகளின் முன் ஆக்கிரமிப்பு செய்து கூரை அமைக்கப்பட்டுள்ளதுடன், காய்கனி மூட்டைகளை வைத்து வியாபாரம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக சந்தை வாசல் வழியாக வாகனங்களில் பொருள்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, களியக்காவிளை தினசரி காய்கனி வியாபாரிகள் சங்கம் சாா்பில் சந்தை கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மதுரை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சிக்கு அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலா் சி. யேசுபாலன் தலைமையில் பேரூராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

16 கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் சந்தை வாசல் அருகில் உள்ள 2 கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடைகாரா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதுகுறித்து பேரூராட்சி மண்டல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை பாதியில் கைவிட்டு பேரூராட்சி அதிகாரிகள் அங்கிருந்து சென்றனா்.

களியக்காவிளை காவல் ஆய்வாளா் எழிலரசி தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

பேரூராட்சித்துறை உயா் அதிகாரிகள் அறிவுறுத்தல்படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.