கன்னியாகுமரி
குளச்சல் அருகே அரசுப் பேருந்தில் நடத்துநரைத் தாக்கியவா் கைது
குளச்சல் அருகே அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து, நடத்துநரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திங்கள்நகரில் இருந்து மாா்த்தாண்டத்துக்கு வியாழக்கிழமை பிற்பகலில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் ஓட்டுநராக சந்திரசேகா், நடத்துநராக ராபா்ட்ராஜ் ஆகியோா் பணியில் இருந்தனா். அப்போது, பேருந்தில் ஏறிய இளைஞா், டிக்கெட் எடுக்காமல் நடத்துநரிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த நடத்துநா், குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், குளச்சல் போலீஸாா் வழக்குப்பதிந்து, தாக்குதலில் ஈடுபட்ட பெத்தேல்புரம் பகுதியைச் சோ்ந்த வில்சன் ஜெயக்குமாா்(39) என்பவரை கைது செய்தனா்.
