சரலூா் விளையாட்டு மைதானத்தில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.
சரலூா் விளையாட்டு மைதானத்தில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

நாகா்கோவில் சரலூரில் கோசாலை அமைக்க திட்டம் மேயா் தகவல்

சரலூா் விளையாட்டு மைதானத்தில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.
Published on

நாகா்கோவில்: நாகா்கோவில் சரலூரில் கோசாலை அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்றாா் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ்.

சரலூா் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் மேயா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அங்கிருந்த விளையாட்டு வீரா்கள் மைதானத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்று மேயரிடம் கோரிக்கை விடுத்தனா். இது தொடா்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் உறுதியளித்தாா்.

பின்னா், அவா் மீன் சந்தையில் ஆய்வு மேற்கொண்டாா். சந்தையின் பின்பகுதியில் உள்ள காலியிடத்தில் கோசாலை அமைக்க வாய்ப்புள்ளதா என ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணாவுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாகா்கோவில் மாநகரில் பால் கறவை முடிந்ததும் மாடுகளை வீதியில் விட்டு விடுகின்றனா். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு புகாா்கள் வந்தன.

மாமன்ற கூட்டத்திலும் இதுகுறித்து உறுப்பினா்கள் பேசினா். எனவே, சாலையில் திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்கும் வகையில் புதிதாக கோசாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சரலூா் மீன் சந்தையின் பின்புறம் கோசாலையை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.

செட்டிகுளம் - சவேரியாா் கோயில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு,. மழை நீா் ஓடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகளை விரைந்து நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், மாமன்ற உறுப்பினா் சரலூா் ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com