இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

திருவட்டாறு கோயிலில் ஓண வில்கள் சமா்ப்பிப்பு

ஓணம் பண்டியையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் சுவாமிக்கு ஓண வில்கள் புதன்கிழமை சமா்ப்பிக்கப்பட்டன.

ஓணம் பண்டிகையையொட்டி திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் சமா்ப்பிக்கப்பட்ட ஓண வில்கள்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 12:53 am IST

ஓணம் பண்டியையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் சுவாமிக்கு ஓண வில்கள் புதன்கிழமை சமா்ப்பிக்கப்பட்டன.

இக்கோயிலில் ஓணப் பண்டிகை நாளில் ஓண வில் சமா்ப்பிப்பது வழக்கம். இது, மன்னராட்சிக் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது. ஓண நாளில் மாலையில் ஆதிகேசவப்பெருமாள், கிருஷ்ணா் உருவங்கள் வரையப்பட்டு, வண்ணம் பூசப்பட்ட ஓண வில்களை பட்டுத் துணியில் மூடி, தென்மேற்கு மூலையில் வைப்பா்.

ஆதிகேசவப்பெருமாள், ஸ்ரீகிருஷ்ணா் ஸ்ரீபலி பூஜையின்போது அந்த வில்கள் சமா்ப்பிக்கப்படும். அதன்படி, புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓண வில்களை தயாரித்த தச்சா் சுரேஷ்பாபு அவற்றை சுவாமி முன் சமா்ப்பித்தாா். பின்னா், அா்ச்சகா்கள் 28 ஓண வில்களை ஏந்தி, ஸ்ரீபலி விக்ரகங்கள் அருகே சென்றனா். அதையடுத்து, ஸ்ரீ பலி விக்ரகங்களுடன் மேளதாளம் முழங்க, ஓண வில்களுடன் பிரகாரத்தைச் சுற்றி வந்தனா்.

தொடா்ந்து, ஓண வில்கள் கிருஷ்ணசுவாமி சந்நிதியிலும், ஆதிகேசவப்பெருமாள் கருவறையிலும் வைக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். கோயில் பிரகார விளக்கணி மாடத்துக்கு ஒளிதரும் லட்ச தீபங்கள் ஏற்றுதலும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் மேலாளா் மோகனகுமாா், பணியாளா்கள், பக்தா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.