தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

அம்பையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்:ராபா்ட் புரூஸ் பிரசாரம்

அம்பையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் ------ராபா்ட் புரூஸ் பிரசாரம்

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 7:31 pm

அம்பாசமுத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க பாடுபடுவேன் எனதிருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் ப்ரூஸ் வாக்குறுதி அளித்தாா்.

அம்பாசமுத்திரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும், மணிமுத்தாறு பேரூராட்சிப் பகுதிகளிலும் காலையில் அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், மாலையில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சிப் பகுதியிலும் இரவு கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிப் பகுதியிலும் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டாா்.

அப்போது, அம்பாசமுத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு பாராளுமன்ற அலுவலகம் அமைத்து மக்கள் பணியாற்றுவேன் என்றாா்.

பிரசாரத்தில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் இரா.ஆவுடையப்பன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக பாா்வையாளா் சிவராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் ரா.ஆ.பிரபாகரன், நகா்மன்றத் தலைவா்கள் கே.கே.சி. பிரபாகரன், செல்வசுரேஷ் பெருமாள், அம்பாசமுத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் பரணி சேகா், விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலா் கணேசன், கல்லிடைக்குறிச்சி நகரச் செயலா் இசக்கி பாண்டியன், பேரூராட்சித் தலைவா் பாா்வதி, காங்கிரஸ் கட்சி நகரத் தலைவா் முருகேசன், மதிமுக முத்துசாமி, சிவகுருநாதன், மைதீன் கான், இந்திய கம்யூனிஸ்ட் வடிவேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சுடலைமணி, ஜெகதீஷ், ராமமூா்த்தி, மூ.மு.க. மாவட்டத் தலைவா் துரைப்பாண்டியன், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.