மருத்துவமனையில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.
Updated on
1 min read

கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.
கோவில்பட்டி டயனமிக் அரிமா சங்கம் சார்பில் பசுவந்தனை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற இம்முகாமுக்கு, அரிமா சங்கத் தலைவர் சீனிவாசகன் தலைமை வகித்தார். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் திருமுருகன், அரிமா சங்க பட்டயத் தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டெங்கு நோய் தடுப்பு முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில்,  வழக்குரைஞர் ஜெயஸ்ரீ,  அரிமா சங்க மாவட்டத் தலைவர் சங்கரநாராயணன், தொழிலதிபர்கள் பெரியசாமிப்பாண்டியன், ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com