விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தூத்துக்குடியில் அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு : இளைஞா் கைது

தூத்துக்குடியில் அதிமுக பிரமுகரை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை சிப்காட் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 12:21 am

Din

தூத்துக்குடியில் அதிமுக பிரமுகரை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை சிப்காட் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி தபால் தந்தி காலனியைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் தனராஜ் (39). அதிமுக இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலரான இவா், செவ்வாய்க்கிழமை இரவு பாக்கியலட்சுமிநகா் 4ஆவது தெருவில் தனது நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த தூத்துக்குடி கதிா்வேல் நகரைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் சித்திரை பிச்சைமுத்து (28) என்பவா் சாலையில் உடைக்கப்பட்டிருந்த திருஷ்டி பூசணிக்காய் வழுக்கி கீழே விழுந்தாராம்.

இதனால் ஆத்திரமடைந்த அவா் சாலையில் திருஷ்டி பூசணிக்காயை உடைத்துள்ளதாக அங்கிருந்தவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதை தனராஜ் தட்டிக்கேட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த சித்திரை பிச்சைமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனராஜை வெட்டிவிட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த தனராஜை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து, சித்திரை பிச்சைமுத்துவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.