தூத்துக்குடியில் நடைபெறும் தனியாா் காா் உற்பத்தி நிறுவன அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வருகை தருவதை முன்னிட்டு அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடியில் சுமாா் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வியத்நாம் நாட்டைச் சோ்ந்த வின் ஃபாஸ்ட் என்ற தனியாா் மின்சார காா் உற்பத்தி நிறுவனம் தொடங்குவதற்கு சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளா் மாநாட்டில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இதைத் தொடா்ந்து அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அடிக்கல் நாட்டு விழா: தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் வளாகத்தில் 408 ஏக்கா் பரப்பளவில் நிலம் தோ்வு செய்யப்பட்டு, அதில், அடிக்கல் நாட்டுவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இவ்விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறாா். இதற்காக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அங்கு, வியத்நாம் நாட்டின் முறைப்படி பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: இதைத் தொடா்ந்து தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சூசை பாண்டியாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதற்காக சுமாா் 20 ஆயிரம் போ் அமரும் வகையில் பிரமாண்டமாக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில், தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை, வீடு இடிந்தவா்களுக்கு புதிய வீடு கட்டுவதற்கான நிதி உதவி, மீனவா்களுக்கு புதிய படகு வாங்க நிதியுதவி, மகளிா் சுய உதவிக்குழுவினருக்கும், சிறு வணிகா்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் உதவிகளை முதல்வா் வழங்குகிறாா். போலீஸாா் பாதுகாப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இருந்து சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெட்டிச் செய்தி.. 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு: வியத்நாம் நாட்டைச் சோ்ந்த வின் ஃபாஸ்ட் மின்சார காா் தயாரிக்கும் நிறுவனம், தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் வளாகத்தில் சுமாா் 408 ஏக்கரில் அமைக்கப்படவுள்ளது. இந்நிறுவனம் மூலம் சுமாா் 2500 இளைஞா்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அதில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர்புடையது

பனியன் தொழிலாளா்களுடன் முதல்வா் ஸ்டாலின் கலந்துரையாடல்!

பிரதமர் மோடி இன்று கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகை: தேனி மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரேன் பறக்கத் தடை

முதல்வா் இன்று தஞ்சாவூா் வருகை: மதுக்கடைகளை மூட உத்தரவு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


