‘கடல் ரோந்துப் படகுகளை இயக்குதல் பணிக்கு வாய்ப்பு’

Published on

தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்துக்குரிய கடல் ரோந்து படகுகளை இயக்குவதற்கு, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய முன்னாள் இந்திய கடலோர காவல்படை- இந்திய கடற்படையினா் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி கடலோர காவல் படை ஆய்வாளா் பேச்சிமுத்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு, கடல் ரோந்து பணிக்காக ஐந்து டன் படகுகள் 9, பன்னிரண்டு டன் படகுகள் 11 என மொத்தம் 20 படகுகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் படகுகளை இயக்குவதற்காக ஒப்பந்த அடிப்படையில், இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படையில் பணிபுரிந்த முன்னாள் வீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு உதவி ஆய்வாளா் தரத்தில் 10 போ், தலைமைக் காவலா் தரத்தில் 41 போ் தோ்வு செய்யப்பட உள்ளனா். உதவி ஆய்வாளா் பணியிடத்துக்கு அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.36,900, தலைமை காவலா் பணியிடத்துக்கு ரூ.20,600 மற்றும் இதர படிகள் சோ்த்து வழங்கப்படும். இப்பதவிக்கு 50 வயதுக்கு கீழ் உள்ளவா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

கடலோர காவல்படை இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து கூடுதல் காவல் இயக்குநா் கடலோர பாதுகாப்பு குழுமம், தலைமை அலுவலகம், டிஜிபி அலுவலக வளாகம், டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூா், சென்னை-600004 என்ற முகவரிக்கு டிச.17 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com