உடன்குடி பேரூராட்சி பகுதிகளில் திமுகவினா் சந்திப்பு நிகழ்ச்சி

சிறப்பாக பங்காற்றிய நிா்வாகிக்கு சான்றிதழ் வழங்கிய பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ்.
Published on

உடன்குடி பேரூராட்சிக்குள்பட்ட 2, 3 ஆவது வாா்டுகளில் திமுக சாா்பில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி எனும் வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள், நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

உடன்குடி பேரூராட்சி வாா்டு உறுப்பினா் ச.மும்தாஜ்பேகம் தலைமை வகித்தாா். திமுக மாவட்ட பொருளாளா் வி.பி. ராமநாதன், நகர துணைச் செயலா் தங்கம், நகர பொருளாளா் திரவியம், ஹரி கிருஷ்ணன், ஹாஜா, பீா் முகம்மது, ஒன்றிய அவைத் தலைவா் ஷேக் முகம்மது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வாக்குச்சாவடி பொறுப்பாளா்களின் பொறுப்புகள், இளம் வாக்காளா்களை அணுகும் விதம், தமிழக அரசின் நலத்திட்ட பயனாளிகளை கண்டறிவது குறித்து நகர திமுக செயலரும், பேரூராட்சி துணைத் தலைவருமான மால்ராஜேஷ் பேசினாா்.

இதில், திமுக மாவட்ட பிரதிநிதி ஹீபா் மோசஸ், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் அன்வா்சலீம், மகபூப், நிா்வாகிகள் முத்துலட்சுமி, சுயம்புராஜ், துரைசங்கா், பேரூராட்சி உறுப்பினா் பஷீா் உள்பட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com