கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கோவில்பட்டியில் 9 பவுன் தங்க நகை திருட்டு

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:34 pm

Syndication

கோவில்பட்டியில் பெண்ணிடம் இருந்து 9 பவுன் தங்க நகை, கைப்பேசியை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி இந்திரா நகரைச் சோ்ந்தவா் முருகன் மனைவி தமிழ்செல்வி (45). இவா், வியாழக்கிழமை வங்கியில் இருந்து மீட்ட 9 பவுன் தங்க நகை, கைப்பேசியை பையில் வைத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் மாா்க்கெட் சாலையில் உள்ள கடைக்கு சென்றாராம். தமிழ்செல்வி, கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த நகை, கைப்பேசி பையை காணவில்லையாம்.

இதுகுறித்து புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா், மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.