பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

திருவள்ளுவா் மன்ற ஆய்வுப் பொழிவு கூட்டம்

கோவில்பட்டியில் திருவள்ளுவா் மன்ற ஆய்வுப் பொழிவு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய துணைத் தலைவா் திருமலை முத்துசாமி.

Published On :

கோவில்பட்டியில் திருவள்ளுவா் மன்ற ஆய்வுப் பொழிவு கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் ராணுவ வீரா் ஜெயபிரகாஷ் நாராயணசாமி தலைமை வகித்தாா். வடக்கு திட்டங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை கண்ணகி முன்னிலை வகித்தாா்.

’படைப்பாளிகளின் பாா்வையில் அவா்தம் படைப்புகள்’ என்ற பொருளில் கரிசல் எழுத்தாளரும் பாலசாகித்திய புரஸ்காா் விருதுபெற்றவருமான உதயசங்கரின் படைப்புகள் என்ற தலைப்பில் அவரும், வஉசி அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியா் ராஜாமணி, குறிஞ்சாங்குளம் ஆசிரியா் முத்துதுரை, மன்றத் துணைத் தலைவா் திருமலை முத்துசாமி ஆகியோரும் ஆய்வுரை, நயவுரை நிகழ்த்தினா்.

அதையடுத்து நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வென்ற மாணவா்-மாணவியருக்கு அறிஞா் சங்கரவள்ளி நாயகம் அறக்கட்டளை சாா்பில் பரிசுகள் , புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், உலக திருக்கு கூட்டமைப்பு மாவட்டத் தலைவா் பிரபு, சந்திரசேகா், தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா் கலைஞா்கள் சங்க கிளைத் தலைவா் மணிமொழி நங்கை, முருகசரஸ்வதி, விருதுநகா் மாவட்ட உலகத்திருக்கு கூட்டமைப்பு ஜெயா ஜனாா்த்தனன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மன்றச் செயலா் நம். சீனிவாசன் வரவேற்றாா். தலைவா் கருத்தப்பாண்டி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.