திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

துறையூர் நகராட்சி ஆணையர் பதவி நிரப்பப்படுமா?

துறையூர், செப்.  27:  திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சியில் ஆணையர் உள்ளிட்ட 42 பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளதால், நகராட்சியின் பெரும்பாலான பணிகள் சரிவரச் செய்யப்படாத நிலையில், தீர்க்

Updated On :20 செப்டம்பர் 2012, 11:40 pm IST

துறையூர், செப்.  27:  திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சியில் ஆணையர் உள்ளிட்ட 42 பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளதால், நகராட்சியின் பெரும்பாலான பணிகள் சரிவரச் செய்யப்படாத நிலையில், தீர்க்கப்படாத பல பிரச்னைகளால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

  துறையூர் நகராட்சியில் பொது நிர்வாகம், பொது சுகாதாரம், வருவாய்ப் பிரிவு, பொறியாளர் மற்றும் குடிநீர்ப் பிரிவு, நகரமைப்புப் பிரிவு உள்ளிட்டவற்றில் 86 துப்புரவுப் பணியாளர்கள் உள்பட 152 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால், தற்போது 110 பேர்தான் பணிபுரிந்து வருகின்றனர்.

  குறிப்பாக, 2010 தொடக்கம் முதலே ஆணையர் பணியிடமும் காலியாக உள்ளது. நகராட்சியின் மொத்த வருவாயில் 49 சதத்திற்கு மிகாதவாறு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற விதி இருப்பதாலும், துறையூர் நகராட்சிக்கு வருவாய் ஆதாரம் குறைவாக இருப்பதாலும், காலிப் பணியிடங்களை நிரப்ப இயலவில்லை என்ப

தோடு,    இத்தகைய சூழ்நிலையில், பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், அனைத்துப் பணிகளையும் உரிய காலத்தில் முடிக்க இயலவில்லை எனவும் கூறப்படுகிறது .

 2009 - 10 ஆம் ஆண்டின் வருவாய் | 2 கோடியே 33 லட்சம். இதில், சுமார் | 1 கோடியே 57 லட்சத்து 50 ஆயிரம் ஊதியத்திற்கும், | 11.20 லட்சம் ஓய்வூதியப் பயன்களுக்கும் செலவிடப்பட்டுள்ளது.

   நகரில் உள்ள தெரு விளக்குகளைப் பராமரிக்கும் பணியில் சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஈடுபடுத்தப்பட்ட போது பணி சிறப்பாக இருந்தது. நாளடைவில் அதை மேற்பார்வையிடக்கூட களப் பணியாளர் இல்லாத நிலையில், தற்போது பல பகுதிகளில் விளக்குகள் எரியவில்லை.

   துப்புரவுப் பணியைப் பொருத்தவரை ஒரு முறை ஒரு தெருவில் சுத்தம் செய்தால், மறுபடியும் அங்கு சுத்தம் செய்ய ஒரு வாரம் ஆவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கொசு மருந்து அடிக்காமலேயே நகராட்சி ஆவணங்களில் கொசு மருந்து அடித்ததாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 வார்டுகளில் உள்ள பொதுக் கழிப்பறைகளைச் சுத்தப்படுத்துவதிலும் குறை நிலவுகிறது. அந்தப் பணியை தனியாரிடம்விட முடிவு செய்த போது, எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில் அதுவும் கைவிடப்பட்டது.

   குடிநீர் வடிகால் வாரியத்திடம் 1000 லிட்டர் தண்ணீர் | 4.50 வீதம், நாள்தோறும் 22.80 லட்சம் லிட்டர் காவிரி கூட்டுக் குடிநீர் வாங்கியும், நகரில் ஆங்காங்கே ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து, குடிநீர் விநியோகிக்க மாதம்தோறும் | 90 ஆயிரம் மின்சாரக் கட்டணமாகச் செலவிடப்படுகிறது.  அவ்வப்போது நகராட்சி அலுவலகம் முற்றுகை, சாலை மறியல் எனப் பொதுமக்கள் ஈடுபடும் அளவுக்குதான் குடிநீர் விநியோகம் உள்ளது. பழைய பகிர்மானக் குழாய்களை அகற்றி, புதிய குழாய் அமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை.

   எனவே, நகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்பவும், நகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் வகையில் நகராட்சி வணிக வளாகம், பேருந்து நிலையக் கட்டடத்தில் முதல் தளத்தில் கடைகள் அமைக்கவும், சின்ன ஏரிக்கரையில் தாற்காலிகத் தரைக் கடைகள் அமைக்கவும் அனுமதித்து, நகராட்சியின் வருவாயைப் பெருக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.