இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

"பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு தன்னாட்சி அதிகாரம் தேவை'

திருச்சி, ஜன. 8: பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அகில இந்திய பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட மாநாடு  முதன்மைப்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

திருச்சி, ஜன. 8: பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 அகில இந்திய பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட மாநாடு  முதன்மைப் பொது மேலாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் வி. உஷா தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர் எஸ். காமராஜ் தொடக்கவுரையாற்றினார்.

 மாநாட்டையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில், "வலிமையான பி.எஸ்.என்.எல். இந்த சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம்' என்ற தலைப்பில் சென்னை லயோலா கல்லூரி வணிக மேலாண்மைத் துறைப் பேராசிரியர் எம். விக்டர் லூயிஸ் அந்துவான் பேசினார்.  

 "செல்போன் இணைப்புகளை விரிவுபடுத்த தேவையான சாதனங்கள் இல்லாததால், கூடுதல் இணைப்புகளை வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு தன்னாட்சி பெற்ற பொதுத் துறை நிறுவனத் தகுதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

 மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் தொலைத் தொடர்புச் சேவைகளை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் பெற வேண்டும்.

 சிறந்த வாடிக்கையாளர் சேவை மையத்தை உருவாக்க முக்கியப் பங்காற்றி, மாவட்டத்துக்கு விருது பெற்றுத் தந்த திருச்சி தொலைத் தொடர்பு மாவட்ட முதன்மைப் பொது மேலாளர் வி. ராஜுவுக்கு பாராட்டு தெரிவிப்பது' என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்க மாநிலச் செயலர் ராஜசேகரன், வங்கி ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கோ. ராமராஜ், அரசுப் பணியாளர் சங்க பொதுச் செயலர் ம. பரமசிவம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

  மாநாட்டில் சங்கத்தின் புதிய மாவட்டச் செயலராக டி. குணசேகரனும், மாவட்டத் தலைவராக யு. பொன்னுசாமியும், பொருளாளராக ஆர். அசோக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.