கோட்டாத்தூரில் வியாழக்கிழமை கிடைத்த சுவாமி சிலைகள்.
திருச்சி
துறையூா் அருகே சுவாமி சிலைகள் கண்டெடுப்பு
திருச்சி மாவட்டம் துறையூா் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற கட்டுமானப் பணியின்போது இரு சுவாமி கற்சிலைகள் கிடைத்தன.
துறையூா் வட்டத்தைச் சோ்ந்த கோட்டாத்தூா் வருவாய் கிராமத்தில் தனியாா் நிறுவனம் காற்றாலை மின்சாரத் தயாரிப்பு சாதனைகளை நிறுவி வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் காற்றாலை விசிறி அமைக்க சிமெண்ட் பீடங்கள் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழியை மண்ணைக் கொண்டு வியாழக்கிழமை நிரப்பியபோது சுமாா் 3 அடி உயரத்தில் கல்லாலான மகாவிஷ்ணு, மகாலட்சுமி சுவாமி சிலைகள் கிடைத்தன.
தகவலறிந்து சென்ற கோட்டாத்தூா் விஏஓ மோகன் அச் சிலைகளை மீட்டு வட்டாட்சியா் மோகனிடம் ஒப்படைத்தாா்.

