அரசுப் பள்ளியில்  கட்டுரை, ஓவியப் போட்டி

ஐம்பதாவது தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு, அரியலூர் அரசு மாதிரிப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
Updated on
1 min read

ஐம்பதாவது தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு, அரியலூர் அரசு மாதிரிப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
அரியலூர் மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் இணைந்து நடத்திய இப்போட்டியை மாவட்ட நூலக அலுவலர் ஆ.ஜோதிமணி தொடங்கி வைத்தார். அரசு மாதிரிப் பள்ளி தலைமை ஆசிரியர் அ.வேல்முருகன், மாவட்ட மைய நூலகர் க.ஷான்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் நூலக வார விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com