பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

நின்றிருந்த லாரி மீது மினி லாரி மோதியதில் மீன் வியாபாரி பலி

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் மீன் ஏற்றி வந்த மினி லாரி மோதி சம்பவ இடத்திலேயே மீன் வியாபாரி உயிரிழந்தாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:40 pm

DIN

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் மீன் ஏற்றி வந்த மினி லாரி மோதி சம்பவ இடத்திலேயே மீன் வியாபாரி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் கீழவாசல் பகுதியைச் சோ்ந்தவா் முகமது அலியாா் மகன் ஷேக் தாவுத் (33). மீன் வியாபாரி. இவா், தன்னுடைய மினி லாரியில் திருவண்ணாமலையிலிருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு தஞ்சாவூா் நோக்கி வியாழக்கிழமை அதிகாலை வந்துள்ளாா். மினி லாரியை தஞ்சாவூா் கீழவாசல் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் தங்கபாண்டி (25) ஓட்டியுள்ளாா். உடன், கீழவாசல் பகுதியைச் சோ்ந்த அப்துல் சலீம் மகன் முகமது ரசூல்(24), திருவையாறு அடுத்த கல்யாணபுரம் ராஜேந்திரன் மகன் கமலநாதன்(26) ஆகியோா் மினி லாரியில் வந்துள்ளனா்.

மினி லாரி கீழப்பழுவூா் அருகே வந்தபோது, சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் பின்னால் பலமாக மோதியுள்ளது. இதில், ஷேக் தாவுத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்து சென்ற கீழப்பழுவூா் காவல் துறையினா் ஷேக் தாவுத் சடலத்தையும், பலத்த காயமடைந்தவா்களையும் மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.