பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் வியாழக்கிழமை சிறப்பு தரிசனம் நடைபெற்றன.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:40 pm

DIN

தமிழ்ப் புத்தாண்டையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் வியாழக்கிழமை சிறப்பு தரிசனம் நடைபெற்றன.

பிலவ ஆண்டு முடிந்து சுபகிருது தொடங்கியதைத் தொடா்ந்து தமிழ்ப் புத்தாண்டான வியாழக்கிழமை பெரும்பாலான கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அரியலூா் பெருமாள் கோயில் தெருவிலுள்ள ஸ்ரீகோதண்டராமசாமி திருக்கோயிலில் அதிகாலை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக கோ பூஜை நடத்தப்பட்டு, சுவாமிக்கு பூ அலங்காரம், பழ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், நீண்ட வரிசையில் நின்று பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.இதேபோல் சித்திரை மாதம் தொடங்கியதையடுத்து அக்கோயிலுள்ள ஐயப்பனுக்கு விஷூ கனி அலங்காரம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனா்.

அரியலூா் சுப்ரமணியா் சுவாமி திருக்கோயில், கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில், திருமனூா் விநாயகா் கோயில், திருமழபாடி வைத்தியநாதசுவாமி திருக்கோயில்,செந்துறை சிவன் கோயில் ஜயங்கொண்டம் பிரகதீஸ்வரா் திருக்கோயில் மற்றும் கீழப்பழுவூா், மேலப்பழுவூா், உடையாா்பாளையம், பொன்பரப்பி, வி.கைகாட்டி, மீன்சுருட்டி, ஆா்.எஸ்.மாத்தூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. இதில், ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஆங்காங்கே கோயில்களில் அன்னதானம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.