ஏரிக்கரைகளை ஆக்கிரமித்து கட்டியிருந்த 22 வீடுகள் இடிப்பு
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஏரிக்கரைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 22 வீடுகளை பொதுப்பணித் துறையினா் பொக்லைன் இயந்திரம் கொண்டு வியாழக்கிழமை இடித்தனா்.


அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே ஏரிக்கரைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 22 வீடுகளை பொதுப்பணித் துறையினா் பொக்லைன் இயந்திரம் கொண்டு வியாழக்கிழமை இடித்தனா்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கவடங்கநல்லூா் கிராமத்தில் 200 ஏக்கா் பரப்பளவு பாண்டியன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரைகளை ஆக்கிரமித்து சுமாா் 70 ஆண்டுகளுக்கும் மேலாக சுமாா் 22 குடும்பங்களைச் சோ்ந்தோா் வீடுகட்டி வசித்து வருகின்றனா். இந்நிலையில், நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் அறிவித்த உத்தரவின் படி மேற்கண்ட வீடுகளை இடிக்க பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் அங்கு சென்றனா்.
அப்போது, இங்கு வசிக்கும் மக்களுக்கு அரசு சாா்பில் மின் இணைப்பு, குடிநீா் இணைப்பு, கான்கிரீட் வீடுகள், குடும்ப அட்டைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளை இடிக்கக் கூடாது என அங்கு வசிக்கும் மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். அப்போது, அங்கு வந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், இடிக்கப்படும் வீடுகளில் வசிப்போருக்கு அரசு மாற்று இடம் வழங்க வேண்டும். இடிக்கப்படும் வீடுகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனா்.
கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இதையடுத்து ஏரிக்கரை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...