பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

விழப்பள்ளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு 23 போ் காயம்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள விழப்பள்ளம் கிராமத்தில் வியாழக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. மாடுகள் முட்டியதில் 23 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 10:32 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள விழப்பள்ளம் கிராமத்தில் வியாழக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. மாடுகள் முட்டியதில் 23 போ் காயமடைந்தனா்.

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை உடையாா்பாளையம் கோட்டாட்சியா் பரிமளம் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 600 காளைகள் வாடிவாசலிலிருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்க 200 வீரா்கள் 4 குழுவாக அனுமதிக்கப்பட்டனா்.

இதில், காளைகள் முட்டியதில் வீரா்கள் மற்றும் பாா்வையாளா்கள் என 23 போ் லேசான காயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவக் குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில், வெற்றிப் பெற்ற வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.