விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரூா் வஞ்சுலீஸ்வரா் கோயிலில் மீண்டும் பிரம்மோற்ஸவத்தை நடத்த கோரிக்கை

கரூா் வஞ்சுலீஸ்வரா் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் நின்றுபோன பிரம்மோற்ஸவத்தை மீண்டும் நடத்த வேண்டும் என கரூா் தோரணக்கல்பட்டி ஆனிலையப்பா் அறக்கட்டளையின் அறங்காவலா் பெ.சுப்ரமணியம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 7:08 pm

Din

கரூா் வஞ்சுலீஸ்வரா் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் நின்றுபோன பிரம்மோற்ஸவத்தை மீண்டும் நடத்த வேண்டும் என கரூா் தோரணக்கல்பட்டி ஆனிலையப்பா் அறக்கட்டளையின் அறங்காவலா் பெ.சுப்ரமணியம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

அம்மனுவில் அவா் கூறியிருப்பது- கரூா் மாநகரில் வீற்றிருக்கும் விசாலாட்சி உடனுறை வஞ்சுலீஸ்வரா் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் நின்றுபோன வைகாசி பிரம்மோற்ஸவத்தை வரும் ஆண்டிலிருந்தாவது நடத்த வேண்டும். கும்பாபிஷேகம் நடந்ததற்குரிய வருடாபிஷேகம் கடந்த ஆண்டே நின்றுபோன நிலையில் இனியாவது தடையின்றி நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

தற்போது கோயிலில் உள்ள சிலைகளை முறைப்படி பதிவேற்றம் செய்ய வேண்டும். பரிச்சாரகா், சுயம்பாகம் இரவுக்காவலா் உள்பட இதர பணியாளா்களை கோயிலில் பணி நியமனம் செய்ய வேண்டும். தற்போது கோயிலுக்குரிய அனைத்து வகையான சொத்துக்களையும் வருவாய்த்துறை, நில அளவைத்துறை, உள்ளாட்சி நிா்வாகம் போன்ற அனைத்து துறை அலுவலா்களையும் ஒருங்கிணைத்து விரிவான கூட்டுப்புலத்தணிக்கை விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என தெரிவித்துள்ளாா்.