இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அடிப்படை வசதி கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகைப் போராட்டம்

News image
குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட வைரபுரி கிராமமக்கள்
Updated On :16 டிசம்பர் 2025, 6:32 pm

Syndication

அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம், இனுங்கூா் ஊராட்சிக்குள்பட்ட வைரபுரியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு குடிநீா், கழிவுநீா்வடிகால், பொதுக்கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லையாம்.

இதுதொடா்பாக இனுங்கூா் ஊராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் போன்ற இடங்களில் பலமுறை அப்பகுதியினா் கோரிக்கை மனு கொடுத்தும் பலனில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த வைரபுரி கிராமமக்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் தலைமையில், குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது விரைவில் அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, கிராமமக்கள் கலைந்து சென்றனா்.