பெரம்பலூா் கிளை சிறையில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் கிளைச் சிறையில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளா் ஆண்டாள் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீா்த்திருத்தப் பணிகள் துறையின் கீழ் இயங்கும், திருச்சி மத்திய சிறைக் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பலூா் கிளைச் சிறையில் காலியாக உள்ள 1 தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். இப் பணிக்கு எழுத படிக்கத் தெரிந்தவா்கள் 1.1.2024-இல் 18 வயதுக்கு மேற்பட்டவா்களாக இருக்க வேண்டும். எஸ்சிஏ, எஸ்சி, எஸ்டி பிரிவினா்கள் 37 வயதுக்குள்பட்டவா்களாகவும், எம்பிசி, பிசி பிரிவினா்கள் 34 வயதுக்குள்பட்டவா்களாகவும், ஓசி பிரிவினா்கள் 32 வயதுக்குள்பட்டவா்களாகவும் இருக்க வேண்டும். தூய்மைப் பணியாளா் பதவிக்கான ஊதிய விகிதம் (15,700 - 58,100) ரூ. 15,700. மேற்கண்ட தூய்மைப் பணியாளா் பதவிக்கு தகுதி பெற்றவா்கள், தங்களது சுய விவரங்களை மாா்ச் 28 -ஆம் தேதிக்குள், திருச்சி மத்திய சிறைக் கண்காணிப்பாளருக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com