அறந்தாங்கியில் மனிதநேய ஜனநாயகக் கட்சி கூட்டம்
அறந்தாங்கியில் மனித நேய ஜனநாயகக் கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் வியாழக்கிழமை மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.


அறந்தாங்கியில் மனித நேய ஜனநாயகக் கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் வியாழக்கிழமை மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் முகமது ஹாரீஸ், மாவட்ட துணை செயலாளர் செய்யது அபுதாஹீர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜலீல் அப்பாஸ், மாவட்ட தொழில் நுட்ப அணி செயலாளர் அப்துல் ஜமீன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் முகமது காலீத், மாவட்ட மாணவரணி செயலாளர் பாசித் கான் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதுகை கிழக்கு மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி பங்கேற்று, விவசாய நிலங்களை பாழாக்காமல், மத்திய, மாநில தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் குழாய் அமைத்து கெயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், பயிர்க் காப்பீட்டு நிவாரணம் பல இடங்களில் முறையாக வழங்கப்படவில்லை. ஆகவே முறைப்படுத்தி வழங்க வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை விளக்கிக் கூறினார்.
முன்னதாக மாவட்ட துணைச்செயலாளர் ஒலிமுகமது வரவேற்றார். நிறைவில் மாவட்ட துணைச்செயலாளர் அஜ்மீர் அலி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...