கிராம உதவியாளா் பணிக்கான 
நோ்காணல், தோ்வு தொடக்கம்

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

பொன்னமரவதி வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நோ்காணலில் சைக்கிள் ஓட்டுவதை பாா்வையிட்ட இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் கோகுல்சிங்.
Published on

பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல் மற்றும் தோ்வு வியாழக்கிழமை தொடங்கியது.

பொன்னமராவதி வட்டத்தில் நாத்துப்பட்டி, திருக்களம்பூா், ஆவாம்பட்டி, சித்தூா் ஆகிய வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 4 கிராம உதவியாளா்கள் பணிக்காக தோ்வுக்கு மொத்தம் 106 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இதையடுத்து வியாழக்கிழமை இவா்களில் 53 போ் அழைக்கப்பட்டதில் 40 போ் பங்கேற்றனா். இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் கோகுல்சிங் தலைமையில் எழுத்துத் தோ்வு, சைக்கிள் ஓட்டுதல், சான்றிதழ் சரிபாா்ப்பு ஆகியவை நடைபெற்றது. பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் பழனிச்சாமி, துணை வட்டாட்சியா்கள் சேகா், திருப்பதி வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து வெள்ளிக்கிழமை 53 பேருக்கு நோ்காணல் நடைபெற உள்ளது.

X
Dinamani
www.dinamani.com