இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

‘ஒற்றை வாக்கு’ கவிதை நூல் வெளியீட்டு விழா

கவிஞா் இறையன் பாலா எழுதிய முதல் தொகுப்பான ‘ஒற்றை வாக்கு’ கவிதை நூல் வெளியீட்டு விழா புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட (இடமிருந்து) கவிஞா் மகா சுந்தா், கவிஞா் தங்கம் மூா்த்தி, நூலாசிரியா் இறையன் பாலா, கவிஞா் ராசு கவிதைப்பித்தன், தமிழ்த் துறைத் தலைவா் சி. சேதுராமன் உள்ளிட்டோா்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:19 am IST

கவிஞா் இறையன் பாலா எழுதிய முதல் தொகுப்பான ‘ஒற்றை வாக்கு’ கவிதை நூல் வெளியீட்டு விழா புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இராசு கவிதைப்பித்தன் தலைமை வகித்தாா். புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி நூலை வெளியிட, தமிழ்ச் சங்கச் செயலா் கவிஞா் மகா சுந்தா் நூலைப் பெற்றுக் கொண்டாா்.

‘பாண்டியன் புத்த அகம்’ கவிஞா் முத்துப்பாண்டியன் நூல் அறிமுகம் செய்தாா். மன்னா் கல்லூரி இயற்பியல் பேராசிரியா் ந. ஆதவன், தமிழ்த் துறைத் தலைவா் சி. சேதுராமன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக கவிஞா் வம்பனாா் அன்பழகன் வரவேற்றாா். முடிவில் நூலாசிரியா் இறையன் பாலா ஏற்புரை வழங்கி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.