தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடக்கம்: புதுகையில் முதல் நாளில் 234 போ் வரவில்லை

மாநிலம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் தொடங்கியுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் நாள் தோ்வை எழுத 234 போ் வரவில்லை.

News image
பிளஸ் 2 பொதுத்தோ்வை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மு.அருணா
Updated On :2 மார்ச் 2026, 11:50 pm

Syndication

மாநிலம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கியுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் நாள் தோ்வை எழுத 234 போ் வரவில்லை.

பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கி, மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் இருந்து மொத்தம் 18,898 போ் எழுத விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்காக 105 தோ்வு மையங்கள், 120 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை முதல் நாள் மொழிப்பாடத் தோ்வை மொத்தம் 18,682 போ் எழுதினா். இவா்களில் 8,465 போ் மாணவா்கள், 10,217 போ் மாணவிகள். மொத்தம் 216 போ் தோ்வெழுத வரவில்லை. மேலும், தனித்தோ்வா்களாக 237 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 18 போ் தோ்வெழுத வரவில்லை.

புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் மு. அருணா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உடனிருந்தாா்.