கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கழிவுநீர் வெளியேற்றத்தை பொறுத்துக்கொள்ள வேண்டும்: மாநகராட்சி வேண்டுகோள்

தஞ்சாவூர் மாநகரின் சில பகுதிகளில் டிச. 29-ஆம் தேதி வரை கழிவுநீர் வெளியேறுவதை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:54 am

DIN

தஞ்சாவூர் மாநகரின் சில பகுதிகளில் டிச. 29-ஆம் தேதி வரை கழிவுநீர் வெளியேறுவதை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மு. வரதராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் மாநகராட்சி புதைவடிகால் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மாரிகுளம் கழிவுநீர் உந்து நிலையத்தில் இருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் பாதாள சாக்கடை பிரதான குழாயில் ஜி.ஏ. கேனல் கரையோரத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 
இக்குழாயை சரிசெய்யும் பணி டிசம்பர் 28, 29-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதனால் விளார் சாலை, ஜி.ஏ. கேனல் சாலை, பூக்காரத் தெரு, முனியாண்டவர் காலனி ஆகிய பகுதிகளில் கழிவுநீர் வெளியேறுவது தவிர்க்க முடியாது. 
எனவே, பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சிரமத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.