நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

7-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதியம் நிர்ணயிக்க வலியுறுத்தல்

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்பரேஷன் பாரதிய தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :30 ஜனவரி 2017, 8:36 am IST

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்பரேஷன் பாரதிய தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இந்தச் சங்கத்தின் மாநிலப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசு ஊழியர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள சுமார் 1,000 பணியிடங்களை நடைமுறையில் உள்ள ஒப்பந்த அடிப்படையில் தகுதி வாய்ந்த நெல் கொள்முதல் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். நிர்வாகப் பிரிவு ஊழியர்களுக்கும், தரக்கட்டுப்பாடு ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் நிர்ணயித்து கடந்த காலங்களில் வழங்கப்பட்டதைப் போல நிகழாண்டும் களப்பணியில் கடுமையாக உழைக்கும் தரக்கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கும், நிர்வாகப் பிரிவு ஊழியர்களுக்கும் இணையான ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ராஜீவ்ரஞ்சன் குழு பரிந்துரைப்படி நவீன அரிசி ஆலையில் பணிபுரியும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாட்டைக் களைந்து புதிய ஊதிய விகிதத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் டி.ஆர். குமரன் தலைமை வகித்தார். பாஜ மாநில பொதுச் செயலர் ராமலிங்கம், தமிழ் மாநில தலைவர் சரவணபவன், துணைப் பொதுச் செயலர் என். சிதம்பரசாமி, துணைத் தலைவர் கே. முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.