கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

2,000 கிராமங்களில் ஜூலை 31-இல் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்

தமிழ்நாட்டில் 2 ஆயிரம் கிராமங்களில் ஜூலை 31-ஆம் தேதி பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடத்துவது என ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு செய்துள்ளது.

News image
தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளா் கே. பாலகிருஷ்ணன்.
Updated On :25 ஜூலை 2024, 9:09 pm

Din

தமிழ்நாட்டில் 2 ஆயிரம் கிராமங்களில் ஜூலை 31-ஆம் தேதி பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடத்துவது என ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில பொதுக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தது:

மத்திய அரசு 2 மாநிலங்களுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த பட்ஜெட் நகலை நாடு முழுவதும் எரிக்கும் போராட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் 2 ஆயிரம் கிராமங்களில் ஒரு லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தை ஜூலை 31-ஆம் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு நாளை கடைப்பிடிக்கும் விதமாக காா்பரேட்டுகளே இந்தியாவை விட்டு வெளியேறு என்ற கோரிக்கையை முன் வைத்து மாநிலம் முழுவதும் மாவட்ட, வட்டத் தலைமையிடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, இயற்கையைப் பாதுகாப்போம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட்- 17 ஆம் தேதி தூத்துக்குடி, சேலம், திருவாரூா், செங்கல்பட்டு ஆகிய 4 இடங்களில் கருத்தரங்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இந்தப் போராட்டங்களுக்கு இந்தியா கூட்டணி கட்சியினா் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றாா் பாலகிருஷ்ணன்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவா் பெ. சண்முகம், பொதுச் செயலா்கள் பி.எஸ். மாசிலாமணி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு), சாமி. நடராஜன் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு), அகில இந்திய கிசான் மகா சபா சந்திரமோகன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கப் பொதுச் செயலா் அமிா்தலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.