தஞ்சாவூர்
பட்டுக்கோட்டையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம்
பட்டுக்கோட்டையில் திமுக மாவட்டப் பொறுப்பாளா் அலுவலகத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் புதன்கிழமை உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.
சங்கத்தின் மாநிலத் தலைவா் தங்கம் அறிவுறுத்தலின்படி மாவட்டத் தலைவா் ஜெய பாலமுருகன் தலைமையில் திமுக மாவட்ட பொறுப்பாளா் பழனிவேல், நகரச் செயலா் செந்தில்குமாா் முன்னிலையில் புதன்கிழமை கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் திமுக மற்றும் சங்கத்தின் நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.
