பாபநாசம் பகுதிகளில் மழைநீரில் மூழ்கி வாழைக் கன்றுகள் சேதம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டாரப் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் ஆயிரக்கணக்கான வாழைக் கன்றுகள் அழிந்து சேதமானது. உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டாரப் பகுதிகளான பாபநாசம், அரையபுரம், கோபுராஜபுரம் , வங்காரம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை,
கோவில்தேவராயன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்
‘டித்வா’ புயல் காரணமாக வீசிய பலத்த காற்றில் அந்தப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைக் கன்றுகள் பயிரிடப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரில் மூழ்கி சேதமானது. பாதிக்கப்பட்ட வயல்களை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வாழை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
