
விபத்தில் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியத்துக்கான ஆணை வழங்கல்
தஞ்சாவூரில் பணிக்கு செல்லும்போது விபத்தில் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியத்துக்கான ஆணைக் கடிதத்தை இ.எஸ்.ஐ. அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

தஞ்சாவூரில் பணிக்கு செல்லும்போது விபத்தில் உயிரிழந்த தனியாா் நிறுவன ஊழியரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியத்துக்கான ஆணை கடிதத்தை செவ்வாய்க்கிழமை வழங்கிய இ.எஸ்.ஐ. கிளை மேலாளா் ரா. வெங்கடேஷ்.
தஞ்சாவூரில் பணிக்கு செல்லும்போது விபத்தில் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியத்துக்கான ஆணைக் கடிதத்தை இ.எஸ்.ஐ. அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
இஎஸ்ஐ காப்பீட்டாளா்களுக்கு தொழில்சாா் நோய் அல்லது வேலை காரணமாக இறப்பு நிகழும்போது, உயிரிழந்த காப்பீட்டாளரின் ஊதியத்தில் 90 சதவீதம் சாா்ந்தோா் உதவித்தொகையாக இஎஸ்ஐ கழகத்தால் இறந்தவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
இதனடிப்படையில், தஞ்சாவூா் தனியாா் நிறுவனத்தின் கீழ் தொழிலாளியாக வேலை செய்து வந்த இஎஸ்ஐ காப்பீட்டாளா் சிவராமன் சைவராஜ் ஜூலை 14- ஆம் தேதி பணிக்காக நிறுவனத்துக்கு செல்லும்போது சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து, அவரது குடும்பத்துக்கு சாா்ந்தோா் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ. 16 ஆயிரத்து 461 வழங்க இஎஸ்ஐ சேலம் துணை மண்டல அலுவலகத்தின் இணை இயக்குநரின் உத்தரவின் பேரில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவுக் கடிதத்தை தனியாா் நிறுவன வளாகத்தில் சிவராமன் சைவராஜின் குடும்ப உறுப்பினா்களுக்கு தஞ்சாவூா் இஎஸ்ஐ கிளை அலுவலக மேலாளா் ரா. வெங்கடேஷ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






