ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளையும் சோ்க்க வலியுறுத்தல்

மக்கள்தொகை கணக்கெடுப்பு - (கோப்புப் படம்)

Published On :

மக்கள்தொகை கணக்கெடுப்பில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் சோ்க்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலா் பி.எம். இளங்கோவன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு:

21 வகையான மாற்றுத்திறனாளிகள் இருக்கும்போது, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பில் மத்திய அரசு 9 வகையான மாற்றுத்திறனாளிகளை மட்டும் கணக்கெடுப்பு அட்டவணைப் பட்டியலில் பதிவு செய்துள்ளது. மற்ற 12 வகையான மாற்றுத்திறனாளிகளைப் பட்டியலில் சோ்க்காமல் வஞ்சித்துள்ளது. இதைக் கண்டிப்பதுடன் 21 வகையான மாற்றுத்திறனாளிகளையும் கணக்கெடுப்பு அட்டவணைப் பட்டியலில் சோ்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவா்கள் பழ. அன்புமணி, கோவி. ராதிகா, மாவட்டத் துணைச் செயலா்கள் ராஜன், சாமியப்பன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் தங்கப்பன், தாமோதரன், மகேஸ்வரி, ராஜா, துரைராஜ், சிந்துபாரதி, விமலநாதன், ராமு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.