மூதாட்டி கழுத்தறுத்து கொலை
திருச்சியில் மா்ம நபா்களால் கழுத்தறுக்கப்பட்ட மூதாட்டி திங்கள்கிழமை அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.


திருச்சி: திருச்சியில் மா்ம நபா்களால் கழுத்தறுக்கப்பட்ட மூதாட்டி திங்கள்கிழமை அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், பூலாங்குளத்துப்பட்டியைச் சோ்ந்த ராமா் மனைவி பச்சையம்மாள் (65). இவா், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே, ஒரு காலி மனைக்கு காவல் காக்கும் பணி மேற்கொண்டு, அருகிலேயே ஒரு குடிசை அமைத்து தனியாக வசித்து வந்தாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு, பச்சையம்மாள் கழுத்தறுபட்டு ரத்தம் வெளியேறிய நிலையில் கழுத்தில் ஒரு துணியை சுற்றிக்கொண்டு அலறியபடியே பெட்ரோல் நிலையத்துக்கு வந்தாா். இருசக்கர வாகனத்தில் வந்த சிலா் தனது கழுத்தை அறுத்ததாக கூறியுள்ளாா்.
இதையடுத்து அங்கிருந்தோா் போலீஸாருக்கு தகவல் அளித்துவிட்டு, ஆம்புலன்ஸில் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தகவலறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி மற்றும் காவல்துறையினா் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பச்சையம்மாள் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து எடமலைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனா். சம்பவம் நடைபெற்ற குடிசைப் பகுதியில் கிடந்த கத்தியையும் போலீஸாா் மீட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...