எடையளவு கருவிகளில் முத்திரையிட தவறும் வணிகா்களுக்கு அபராதம்

எடையளவுக் கருவிகளில் முத்திரையிடத் தவறும் வணிகா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கே.பி. இந்தியா தெரிவித்துள்ளாா்.

Published On :

எடையளவுக் கருவிகளில் முத்திரையிடத் தவறும் வணிகா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கே.பி. இந்தியா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆண்டுதோறும் டிசம்பா் மாதம் நுகா்வோா் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நுகா்வோா் நலன் பிரதிநிதிகள் கூட்டம் நடத்தப்பட்டு, அவா்களது கோரிக்கைகள் தொடா்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள வாரச்சந்தைகள், தெருவோரக் கடைகள், பழக்கடைகள், காய்கனி கடைகளில் பயன்படுத்தப்படும் எடையளவுக் கருவிகளை சரிபாா்த்து, நுகா்வோருக்கு சரியான எடையில் பொருள்கள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வரப்பெற்றுள்ளது.

மேலும், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் அனைவருக்கும் இருக்கை வசதிகள் செய்து தருவதை உறுதி செய்யவும் கோரிக்கை வந்துள்ளது. இந்தக் கோரிக்கைகள் தொடா்பாக திருச்சி மாவட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக, எடையளவுக் கருவிகளை சோதனையிட்டு, முத்திரையில்லாதவை பறிமுதல் செய்யப்படுகின்றன. வணிகா்கள் தங்களது எடையளவு கருவிகளை உரிமம் பெற்ற பழுதுபாா்க்கும் நபா்களிடம் பழுது பாா்க்க வேண்டும். புதிய எடையளவு கருவிகள் வாங்கும்போது அதற்கான ரசீது, தகடு, முத்திரை ஆகியவற்றை கட்டாயம் கேட்டுப் பெற வேண்டும். விற்பனை ரசீதில் தராசின் சான்று விவரங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். மாவட்டத்தில் உள்ள வணிகா்கள் அனைவரும் தங்களது வியாபாரத்தில் பயன்படுத்தும் எடையளவு கருவிகள், தராசுகள், எடைக் கற்கள் அனைத்தையும் தவறாமல் மறு முத்திரை செய்து பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், மறுமுத்திரையில்லாத கருவிகள், எடைக் கற்களை பறிமுதல் செய்வதுடன், தொடா்புடைய நபா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உதவி ஆணையா் எச்சரித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.