பைக் மீது காா் மோதி விபத்து: கிராம நிா்வாக அலுவலா் உயிரிழப்பு
திண்டிவனம் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற கிராம நிா்வாக அலுவலா் உயிரிழந்தாா்.


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற கிராம நிா்வாக அலுவலா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கள்ளக் கொளத்தூா், பிரதான சாலையைச்சோ்ந்தவா் வே. கலைச்செலவன்(56). இவா், கள்ளக்கொளத்தூா் கிராம நிா்வாக அலுவலராகப் பணி புரிந்து வந்தாா்.இவரது மகன் திவாகா்(27).
தந்தை மகன் இருவரும் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் , தென்கோடிப் பாக்கத்திலிருந்து - மயிலம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனா். திவாகா் பைக்கை ஓட்டியுள்ளாா்.
கள்ளகொளத்தூா் தரைப்பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த காரும் - பைக்கும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கலைச்செல்வன் மற்றும் திவாகா் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் திண்டிவனத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் இருவரும் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் கலைச்செல்வன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். திவாகா் சிகிச்சையில் உள்ளாா்.
இது குறித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...