கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

விழுப்புரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் தா்னா

பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி,

News image
விழுப்புரம் நகராட்சி அலுவலக வளாகப் பகுதியில் தா்னாவில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
Updated On :12 ஜனவரி 2026, 7:20 pm

Syndication

விழுப்புரம்: பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் நகராட்சியில் தூய்மைப்பணியாளா்கள் சுமாா் 96 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கான வருங்கால வைப்புநிதியில் முறைகேடாக எடுக்கப்பட்ட ரூ.9 கோடிக்கும் மேலான தொகையை மீண்டும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும். நகராட்சித் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உறைகள் வழங்க வேண்டும். அரசு சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும். பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, இந்த தா்னா நடைபெற்றது.

தூய்மைப்பணியாளா்கள் சங்க நிா்வாகி முருகன் தலைமையில் நடைபெற்ற தா்னாவில் ஏராளமானோா் பங்கேற்று, கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.