அண்ணாமலைப் பல்கலை.யில் இலங்கை மரபு நடன நிகழ்ச்சி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறை, நுண்கலை மன்றம் வாயிலாக சிறப்பு நிகழ்ச்சியாக இலங்கை மரபு நடனக் கலையான கண்டியன் நடனக் கலை பல்கலைக்கழக லிப்ரா அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இலங்கையைச் சேர்ந்த நாட்டிய ஆசிரியர் ருக்மா பட்டுவிதா மற்றும் அவரது குழுவினர் (14 கலைஞர்கள்) இந்த நடன நிகழ்ச்சியை நடத்தினர். இந்திய மொழியியல் புல முதல்வர் வி.திருவள்ளுவன், குத்துவிளக்கேற்றி நிகழ்வைத் தொடக்கிவைத்து உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இலங்கை நாட்டு நடனக் கலைஞர் ருக்மா பட்டுவிதா, கண்டியன் நடனத்தின் சிறப்புகளைப் பற்றியும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தையும் பாராட்டியும் பேசினார்.
நுண்கலைப் புல முதல்வர் கே.முத்துராமன் வரவேற்றார். இசைத் துறைத் தலைவர் டி. அருட்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவிப் பேராசிரியர் என்.கிரீஷ்குமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
