டெங்கு விழிப்புணர்வு முகாம்
சிதம்பரம் அருகே கடவாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில், டெங்கு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


சிதம்பரம் அருகே கடவாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில், டெங்கு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.வரதராஜன் வரவேற்றார். சிதம்பரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் வி.சக்திவேல், செயலர் வி.அழகப்பன், முன்னாள் தலைவர் இ.மகபூப் உசேன், முன்னாள் செயலர் என்.என்.பாபு, ஆசிரியர்கள் எஸ்.நிர்மலா தேவி, வி.ரம்யா தேவி, விஜயலட்சுமி, கலைச்செல்வி, மகாலட்சுமி, சுமதி, பூங்கொடி, சத்துணவுப் பொறுப்பாளர் லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. பின்னர், மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...