இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வகுப்பறைக் கட்டடம் திறப்பு

பெரியகாட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தை நெய்வேலி எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:54 am

DIN

பெரியகாட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தை நெய்வேலி எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
பண்ருட்டி ஒன்றியம், நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது பெரியகாட்டுப்பாளையம் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 
இங்கு, போதுமான கட்டட வசதி இல்லாத நிலையில், ஊர் மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரனிடம் கட்டட வசதி செய்து தரக்கோரி மனு அளித்தனர்.  அதன் அடிப்படையில், எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன் தனது தொகுதி நிதியிலிருந்து ரூ. 11 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார். அந்தத் தொகையில் புதிதாக இரு வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டன. 
இந்த புதிய வகுப்பறைக் கட்டடங்களின் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நெய்வேலி எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன் பங்கேற்று கட்டடங்களைத் திறந்து வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை வளர்மதி, ஆசிரியர்கள், ஊராட்சிச் செயலர் தனபதி, பரமதேவன், சுந்தரவடிவேலு, தமிழ்செல்வம், ஆறுமுகம், பெருமாள், செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.