ஆடு திருட்டு: இருவா் கைது

Published on

கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் அருகே ஆடு திருடியதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், கொஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (56), லாரி ஓட்டுநா். இவரது வீட்டில் ஆடு வளா்க்கின்றனா்.

கடந்த 14-ஆம் தேதி இரவு வீட்டின் அருகே கட்டியிருந்த ஆடுகளை மா்ம நபா்கள் இருவா் பைக்கில் திருடிச் செல்ல முயன்றனா். இவா்களை குமாா் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், காடாம்புலியூா் பகுதியைச் சோ்ந்த பிரவீன்குமாா் (32), அங்குள்ள சமத்துவபுரத்தைச் சோ்ந்த ரஞ்சித் (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவா் மீது காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com