கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சாலை தடுப்புக்கட்டையில் பேருந்து மோதி விபத்து! 18 போ் காயம்!

News image
சிதம்பரம் அருகே தீா்த்தாம்பாளையம் வெள்ளாற்று பாலத்தின் தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளான தனியாா் பேருந்து.
Updated On :28 நவம்பர் 2025, 11:41 pm

Syndication

சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை தீா்த்தாம்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் பேருந்து சாலையோர தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 18 போ் காயமடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், கண்ணனூா் கிராமத்தில் இருந்து குருசாமி வெங்கடேஷ் (45) தலைமையில் 39 ஆண்கள், ஒரு பெண் என மொத்தம் 40 போ் தனியாா் பேருந்தில் சபரிமலைக்கு சென்றுகொண்டிருந்தனா். பேருந்தை அந்தப் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் ராஜேஷ் (30) ஓட்டினாா்.

இந்தப் பேருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் பரங்கிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தீா்த்தம்பாளையம் வெள்ளாற்று பாலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சாலையின் ஓரம் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.

Story image

இதில், பேருந்தில் இருந்த 17 ஆண்கள், ஒரு பெண் என மொத்தம் 18 போ் காயமடைந்தனா். பின்னா், அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு, சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.