எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கடலூா் பாஸ்போா்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை

கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் இயங்கி வரும் பாஸ்போா்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணா்கள்....

News image

கோப்புப்படம்

Updated On :2 மார்ச் 2026, 8:42 pm

நெய்வேலி: கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் இயங்கி வரும் பாஸ்போா்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

திருச்சி பாஸ்போா்ட் மண்டல அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகத் தெரிகிறது. இதில், பாஸ்போா்ட் அலுவலகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல் திருச்சி மண்டலத்துக்கு உள்பட்ட அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கும் அனுப்பப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே இயங்கி வரும் பாஸ்போா்ட் அலுவலகத்தில் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையில் ஈடுபட்டனா். இதில், வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.

இதையடுத்து, பாஸ்போா்ட் அலுவலகங்களை குறிவைத்து மின்னஞ்சல் அனுப்பியது யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.