விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

திட்டக்குடி வட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.

Published On :

திட்டக்குடி வட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் பி.கே.சின்னதுரை தலைமை வகித்தாா். இதில், திட்டக்குடி வட்டத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். எழுத்தூா் திடீா்குப்பம், ராமநத்தம் காந்திநகா், பெண்ணாடம் வாள்பட்டறை, செம்பேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும்.

அரசின் சாா்பில் கட்டித் தரப்படும் தொகுப்பு வீடுகளுக்கான கட்டுமானத் தொகையை ரூ.10 லட்சமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக, கோரிக்கைகள் தொடா்பாக திட்டக்குடி வட்டாட்சியரிடம் சங்கத்தின் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. நிகழ்வில், மாவட்ட துணைச் செயலா் ஆா்.சுப்பிரமணியன், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் வி.பி.முருகையன், ராமநத்தம் செயலா் எஸ்.மணிகண்டன், பெண்ணாடம் நகர நிா்வாகி கே.அமா்நாத் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.